முகப்பு

அன்வாருஸ் ஸுஃப்பா

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் அன்வாருஸ் ஸூஃப்பா தீனியாத் மக்தப் வழிகாட்டி நிறுவனம் 2001-ல் துவக்கப்பட்டு 2004-ம் ஆண்டு மும்பையின் முறைப்படுத்தப்பட்ட தீனியாத் மக்தப் நிறுவனத்துடன் இணைந்து மூத்த உலமாபெருமக்கள் மற்றும் 33 நிர்வாகிகளின் ஆலோசனைகளின் அடிப்படையில் குறிப்பாக மதிப்புமிகு தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் முழு அங்கீகாரத்துடன் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தற்போது 2500-க்கும் மேற்பட்ட மஸ்ஜிதுகள் மற்றும் மக்தப்களில் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என 1,33,000 (ஒரு இலட்சத்து முப்பத்தி மூன்று ஆயிரம்) மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

இந்த நிறுவனம் ஒவ்வொரு மஸ்ஜிதுகளிலும் அந்த மஸ்ஜிதின் இமாம் மற்றும் நிர்வாகத்தினரின் அனுமதியோடும், ஆதரவுடனும் அஹ்லுஸ் ஸூன்னத் வல்-ஜமாஅத் அடிப்படையில் வழிகாட்டிவருகிறது என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்களுக்கு மார்க்க கல்வியை சேர்ப்பதற்கு மக்தபுதான் இலகுவான வழி என்பதை ஆழ கருத்தில் கொண்டு அல்லாஹ்வின் கிருபையால் சிறுவர், சிறுமியர், ஆண், பெண் என அனைவருக்கும் மார்க்கத்தின் அடிப்படைக் கல்வியைச் சேர்ப்பதே நோக்கமென நமது அன்வாருஸ் ஸூஃப்பா தீனியாத் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

சமீபத்திய பதிவுகள்

படிவங்கள்

எங்கள் நோக்கங்கள்

  • தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலிலெல்லாம் ‘ஸுன்னத் வல்ஜமாஅத்’ அடிப்படையில், எளிமையான முறையில் தீனை கொண்டு சேர்க்க முயற்சி செய்தல்.
  • மாணவர்களின் வயது மற்றும் தகுதிக்கேற்ப பாட திட்டங்களை எளிமையாக அமைத்து, குறைந்த விலையில் புத்தகங்களை வழங்குதல்.
  • மாணவர்களை நாலொழுக்கமுள்ளவர்களாகவும், கற்ற தீனின் வழிகாட்டுதலின்படி வாழ்பவர்களாகவும் வருங்கால சமுதாயத்தை உருவாக்குதல்.
  • மக்தப் மதர்ஸாவின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, ‘மார்கக் கல்வியின் மேம்பாடு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி’ க்கு ஏற்பாடு செய்தல்.
  • தமிழகத்தில் தேவைப்படும் இடங்களிலெல்லாம் மக்தப் மதரஸாக்களை ஆரம்பிக்க முயற்சி செய்தல்.

முறைப்படுத்தப்பட்ட மக்தப்

எந்த மக்தபில் திருக்குர்ஆனை பார்த்து ஓத கற்பிப்பதுடன், தீனுடைய அடிப்படை விஷயங்களையும் கற்பிக்கப்படுகிறதோ, மேலும் அதன் நிர்வாக அமைப்பு சிறந்ததாகவும், கற்பிக்கப்படும் பாடத்திட்டம் ஆதார பூர்வமானகவும், கூட்டு முறையில் அன்போடும், கனிவோடும், மாணவ கண்மணிகளுக்கு கற்பிக்கப்படுவதும், இந்த மக்தபை தரமுள்ளதாக ஆக்க கண்காணிப்பு முறையும் ( ஆக இந்த 4 காரியங்களும் ) இருக்குமானால், அதற்கு “ முறைப்படுத்தப்பட்ட மக்தப் “ என்று கூறப்படும்.

nirvaga-amaippu
நிர்வாக அமைப்பு

மக்தபின் நிர்வாக அமைப்பு முறை

  • பெற்றோருக்கு அக்கறையை ஏற்படுத்தும் வழிமுறை
  • அழகிய சூழ்நிலைகளை உருவாக்கும் முறை
  • பொறுத்தமான இடத்தை தேர்வு செய்தல்.
  • மக்தபின் பொறுப்பாளர்கள்.
  • மாணவர்கள் வந்து செல்ல இலகுவான வகுப்பு நேரங்களை அமைத்தல்
  • மாத கட்டணத்தின் மூலம் மக்தபை தானியங்கியாக ஆக்குதல்
  • தகுதிமிக்க முதல்வர் மற்றும் ஆசிரியர்களை நியமித்தல்
  • வாய் பரீட்சை, மற்றும் எழுத்து பரீட்சை நடத்துதல்
  • ஆண்டு விழா நடத்துதல்
karpikkum murai
கற்பிக்கும் முறை

கற்பிக்கும் முறை

  • மக்தபில் கூட்டுப்பாட முறையை அமைத்தல்.
  • ஒவ்வொரு தலைப்பின் கீழும் ஆசிரியருக்கான அறிவுரை தரப்பட்டுள்ளது. அதன்படி கற்பித்தல்.
  • அன்புடன் கற்பித்தல்
  • ஆசிரியர், மாணவர்களுக்கு ஸூன்னத்துகளை அமல் செய்யும் டி ஆர்வப்படுத்துதல், மற்றும் கண்காணித்தல்
padatthittam

பாடத்திட்டம்

பாடத்திட்டம்

  • தீனியாத் பாடத்திட்டங்களின் அமைப்பு முறையை புரிந்து மக்தபை ஆரம்பம் செய்தல்
  • தீனியாத் பாடத்திட்டத்தின் தனிச்சிறப்புகள்
kankaanippu
கண்காணிப்பு

கண்காணிப்பு:

  • மக்தபின் கல்வி மற்றும் நிர்வாக காரியங்களை கண்காணித்தல்.
  • தமது பகுதிகளில் மக்தபுகளை நிறுவி, அதை கண்காணிக்க ஏற்பாடு செய்தல்

முறைப்படுத்தப்பட்ட மக்தபை உருவாக்க ?

நீங்கள் ஒரு முறைப்படுத்தப்பட்ட மக்தபை உருவாக்க நாடினால், முதல் கட்டமாக என்ன செய்ய வேண்டும்? அதற்கடுத்து என்ன செய்ய வேண்டும்? இவ்வாறு பத்து விஷயங்களையும் நன்கு புரிந்து கொண்ட பிறகே மக்தபை தொடங்க வேண்டும். இவ்வாறு செய்வதால், நமது மக்தப் வெகு சீக்கிரம் முறைப்படுத்தப்பட்ட மக்தபாக உருவாகிவிடும். இன்ஷா அல்லாஹ்.

1
சிந்தித்து முடிவெடுத்தல் மற்றும் உறுதி செய்தல்.
g5967
பாடத்திட்டத்தை விளங்குதல்.
g5963
கற்பிக்கும் முறையை விளங்குதல்.
g6026
இடம் ஏற்பாடு செய்தல்.
g6034
ஆசிரியர் நியமனமும் பயிற்சி கொடுத்தலும்.
g5976
மாணவர்களை ஒன்று திரட்டுதல்.
g5991
சேர்க்கும் முறை.
g5986
சில முக்கிய பணிகள்.
g5981
முறைப்படுத்தப்பட்ட மக்தபை நிறுவிட முயற்சி செய்தல்.
g5996
பாடத்திட்டம் கற்பிக்கும் முறை நிர்வாக கண்காணிப்பு.