எங்களைப் பற்றி

எங்களைப் பற்றி

அறிமுகம்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் அன்வாருஸ் ஸூஃப்பா தீனியாத் மக்தப் வழிகாட்டி நிறுவனம் 2001-ல் துவக்கப்பட்டு 2004-ம் ஆண்டு மும்பையின் முறைப்படுத்தப்பட்ட தீனியாத் மக்தப் நிறுவனத்துடன் இணைந்து மூத்த உலமாபெருமக்கள் மற்றும் 33 நிர்வாகிகளின் ஆலோசனைகளின் அடிப்படையில் குறிப்பாக மதிப்புமிகு தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் முழு அங்கீகாரத்துடன் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தற்போது 2500-க்கும் மேற்பட்ட மஸ்ஜிதுகள் மற்றும் மக்தப்களில் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என 1,33,000 (ஒரு இலட்சத்து முப்பத்தி மூன்று ஆயிரம்) மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

நோக்கம்

தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சரியாக திருக்குர்ஆனை ஓதுதல், குர்ஆனிய அமல்கள், நபி மொழி மற்றும் நபி வழி, இவைகளை வயதிற்கேற்ப முறையாக கொண்டு சேர்ப்பதும் குறிப்பாக நல் அமல்களும் நற்குணங்களும் நிறைந்த வருங்கால சமுதாயத்தை உருவாக்குவதாகும்.

ஒவ்வொரு பகுதியின் பொறுப்பாளர்களுக்கும் தலையாய கடமையான மார்க்கக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி அனைத்து மக்களின் உள்ளங்களிலும் இஸ்லாமிய உணர்வுகளை ஏற்படுத்தி உத்தம நபியின் உயர்ந்த வழியில் வாழச்செய்வதே நமது நோக்கமாகும்.

குறிப்பு

இந்த நிறுவனம் ஒவ்வொரு மஸ்ஜிதுகளிலும் அந்த மஸ்ஜிதின் இமாம் மற்றும் நிர்வாகத்தினரின் அனுமதியோடும், ஆதரவுடனும் வழிகாட்டிவருகிறது என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தமிழகமெங்கும் 66 உலமாக்கள் இந்த மார்க்கப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். 1 ஆலிமின் பொருப்பில் 25 மக்தப்கள் இருக்கின்றன.

தமிழகத்தில் தோராயமாக 7200 மஸ்ஜித்தள் உள்ளன, இன்ஷா அல்லாஹ் அனைத்து மஸ்ஜிதுகளிலும் சிறுவர்கள், சிறுமியர்கள், வாலிபர்கள், பெண் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் அனைவர்களுக்கும் முறையான மார்க்க கல்வி குர்ஆன், ஹதீஸ், துஆக்கள், கொள்கைகள், மற்றும் நபிகளாரின் சுன்னத்தான வாழ்க்கையை போதிப்பதற்கு உண்டான எல்லா முயற்சிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

1 ஆலிம் 25 மஸ்ஜிதுகளில் முறைப்படுத்தப்பட்ட மக்தப்களை உருவாக்க முயற்சிக்கிறார். இதன் அடிப்படையில் 288 ஆலிம்கள் 7200 மஸ்ஜிதுகளில் முறைப்படுத்தப்பட்ட மக்தப்களை உருவாக்க தேவைப்படுகிறார்கள். தற்போது 66 ஆலிம்கள் முழு நேர சேவையில் உள்ளார்கள், மேலும் 222 ஆலிம்களை முழு நேர சேவைக்கு சேர்க்க வேண்டியுள்ளது.

சராசரியாக தமிழகமெங்கும் 1,33,000 மாணவ மாணவிகள் முறையாக மார்க்கக் கல்வியை பயில்கிறார்கள். நன்மையை தூண்டுபவர் அதைச் செய்தவரைப்போன்றவராவார் என்ற நபி மொழியின் அடிப்படையில் சில தனவந்தர்கள் உலமாக்களைப் பொறுப்பேற்று ஸதக்கத்துன்ஜாரியா எனும் அளவில்லா மற்றும் அழியா நன்மைகளைப் பெற்றுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.