முறைப்படுத்தப்பட்ட மக்தப்

முறைப்படுத்தப்பட்ட மக்தப்

nirvaga-amaippu
நிர்வாக அமைப்பு

மக்தபின் நிர்வாக அமைப்பு முறை:

மக்தபின் பொறுப்பாளர்கள்.

  • இவர்கள் மக்தபின் நிர்வாகப் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • மக்தபிற்காக நேரம் தரக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

பொறுத்தமான இடத்தை தேர்வு செய்தல்.

  • மஸ்ஜித் அல்லது ஏதேனும் ஒரு பொறுத்தமான இடத்தில் மக்தபை தொடங்க வேண்டும்.
  • சிறுமிகள், பெண்கள் ஆகியோருக்காக தனியொரு இடத்தை ஏற்பாடு செய்தல்.
  • முஸ்லிம் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் தொடங்கலாம்.

அழகிய சூழ்நிலைகளை உருவாக்கும் முறை

  • பாய், கார்பெட், வகுப்பறைகள் முதலியவற்றை ஏற்பாடு செய்தல்.
  • கரும்பலகை, நூரானீ காயிதா பேனர் ஏற்பாடு செய்தல்.
  • சீருடைகள், பேக், மற்றும் அடையாள அட்டை ஏற்பாடு செய்தல்.
  • மக்தபிற்கு தேவையான பொருட்களை இருப்பு வைத்தல்.

பெற்றோருக்கு அக்கறையை ஏற்படுத்தும் வழிமுறை

  • மக்தபின் அவசியத்தை பற்றி ஜூம்ஆவில் பயான் செய்தல்.
  • தாய்மார்களை ஒன்று கூட்டி மக்தபின் சிறப்பை பயான் செய்தல்.
  • சுற்றறிக்கை, பிட் நோட்டீஸ் விநியோகம் செய்தல்.
  • சுவர் விளம்பரம் செய்தல்.
  • நுழைவு படிவம் ஏற்பாடு செய்தல்.

மாணவர்கள் வந்து செல்ல இலகுவான வகுப்பு நேரங்களை அமைத்தல்

  • சிறார்களுக்குரிய வகுப்பு நேரம்.
  • பருவமடைந்தோருக்குரிய வகுப்பு நேரம்.
  • பெண்களுக்குரிய வகுப்பு நேரம்.
  • ஹிஃப்ளு பிரிவின் வகுப்பு நேரம்.
  • ரமழான் மாதத்தின் வகுப்பு நேரங்கள்

மாத கட்டணத்தின் மூலம் மக்தபை தானியங்கியாக ஆக்குதல்

  • வசதியற்ற மாணவர்களின் மாத கட்டணத்திற்கு தனவந்தர்களை பொறுப்பேற்க ஆர்வப்படுத்துதல்.

தகுதிமிக்க முதல்வர் மற்றும் ஆசிரியர்களை நியமித்தல்

  • மக்தப் பயிற்சி ஆசிரியரை நியமனம் செய்தல்
  • முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியரை நியமனம் செய்தல்
  • முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியரை கொண்டு மக்தபை கண்காணிக்க செய்தல்
  • ஆசிரியர்களுக்கு பொறுத்தமான ஊதியத்தை கண்ணியமாக வழங்குதல்
  • பெற்றோர் கூட்டம் ஏற்பாடு செய்தல்
  • ஆசிரியர்கள் மற்றும் மக்தப் பொறுப்பாளர்கள் மீட்டிங் ஏற்பாடு செய்தல்

வாய் பரீட்சை, மற்றும் எழுத்து பரீட்சை நடத்துதல்

  • அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுகள் நடத்துதல்
  • தேர்வு முடிவுகளை அறிவிக்க ஏற்பாடு செய்தல்

ஆண்டு விழா நடத்துதல்

  • பரிசுகள் வழங்குதல் சான்றிதழ், பதக்கம், ஷீல்ட்
  • பாடத்திட்டத்தில் பயிற்றுவித்த பாடங்களையே ஆண்டு விழாவில் நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கி, சமுதாயத்திற்கு தீனுடைய முக்கியத்துவத்தை ஆர்வப்படுத்தி விளங்க செய்தல்.
padatthittam

பாடத்திட்டம்

பாடத்திட்டம்:

தீனியாத் பாடத்திட்டங்களின் அமைப்பு முறையை புரிந்து மக்தபை ஆரம்பம் செய்தல்

  • தீனியாத் பாடத்திட்டம் எவ்வாறு உருவாக்குப்பட்டது.
  • சிறார்களுக்குரிய தீனியாத் பாடத்திட்டம்.

தீனியாத் பாடத்திட்டத்தின் தனிச்சிறப்புகள்

  • ஐந்து ஆண்டு தொடக்கநிலை பாடத்திட்டம்.
  • ஐந்து ஆண்டு நடுநிலை பாடத்திட்டம்.
  • ஐந்து ஆண்டு உயர்நிலை பாடத்திட்டம்.
  • இரண்டு ஆண்டு ஆண்களுக்குரிய பாடத்திட்டம்.
  • இரண்டு ஆண்டு பெண்களுக்குரிய பாடத்திட்டம்.
karpikkum murai
கற்பிக்கும் முறை

கற்பிக்கும் முறை:

மக்தபில் கூட்டுப்பாட முறையை அமைத்தல்.

  • மாணவர்களின் சேர்க்கை ஒரே நேரத்தில் இருத்தல்.
  • மாணவர்களின் வயதை கவனித்து வகுப்பை அமைத்தல்.

ஒவ்வொரு தலைப்பின் கீழும் ஆசிரியருக்கான அறிவுரை தரப்பட்டுள்ளது. அதன்படி கற்பித்தல்.

  • கால அட்டவணையை விளக்குதல்.
  • விளக்கம் மற்றும் ஆர்வமூட்டல்.
  • பாடம் மற்றும் ரிவிஷனுக்குரிய நாட்கள்.
  • மாதாந்திர கேள்விகள், அளவு பாடம் மற்றும் கையொப்பம்.
  • தொழுகை பயிற்சி மற்றும் தொழுகை அட்டவணை.

அன்புடன் கற்பித்தல்

ஆசிரியர், மாணவர்களுக்கு ஸூன்னத்துகளை அமல் செய்யும் டி ஆர்வப்படுத்துதல், மற்றும் கண்காணித்தல்

  • உண்மை நிகழ்வுகளும், அதன் படிப்பினைகளும்
  • பெரியோருக்கு கற்பிக்கும் முறை.
kankaanippu
கண்காணிப்பு

கண்காணிப்பு:

மக்தபின் கல்வி மற்றும் நிர்வாக காரியங்களை கண்காணித்தல்.

  • மாணவர்களின் கல்வி வளர்ச்சி, மற்றும் ஒழுக்கம், நடை, உடை, செயல்முறை அனைத்தையும் கண்காணித்தல்.
  • அன்றாடம் மாணவர்களின் வருகை மற்றும் விடுமுறைகளை கண்காணித்தல்.
  • தமது மக்தபை முறைப்படுத்தப்பட்டதாக ஆக்க முயற்சி செய்தல்.
  • ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் கண்ணியமான முறையில் ஹதியாவை வழங்கிட ஆவன செய்தல்.

தமது பகுதிகளில் மக்தபுகளை நிறுவி, அதை கண்காணிக்க ஏற்பாடு செய்தல்